தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Master Audio Launch Thalapathy Vijay Viral Selfie

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

Master Audio Launch Thalapathy Vijay Viral Selfie

இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.நேற்று இசை வெளியீட்டு விழா நிறைவின் போது விஜய் அனைவருடனும் சேர்ந்து செல்ஃபி எடுத்தார்.நெய்வேலியில் விஜய் ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபியை தொடர்ந்து இந்த செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது.