தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

விழாவில் பேசிய படத்தின் நாயகன் தளபதி விஜய் தனது டிரேட்மார்க் என் நெஞ்சில் குடியிருக்குமுடன் ஆரம்பித்த விஜய் தனது ரசிகர்கள் பலர் இந்த ஆடியோ லான்ச்சில் கலந்துகொள்ள முடியாதது தனக்கும் வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.எல்லா பாட்டுக்கு பின்னாலும் ஒரு குட்டி கதை இருக்கும் ஆனால் அனிருத் குட்டிக்கதையையே பாட்டாக்கிவிட்டார் என்று தெரிவித்தார்.

நண்பர் அஜித்தை போல தானும் கோட் சூட் அணிந்து வந்ததாக விஜய் தெரிவித்தார்.நமது வாழ்க்கையும் ஒரு நதியை போல தான் சிலர் பாராட்டுவார்கள்,சிலர் நம் மீது கல் எறிவார்கள் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் நாம் செல்லவேண்டும் என்று தெரிவித்தார்.


விஜய்சேதுபதி தமிழ் சினிமாவுல ஒரு தவிர்க்க முடியாத ஆளா வளர்ந்து நிற்கிறார்.படத்தில் அவர் தான் வில்லன் அவருக்கு தான் நிறைய நெகடிவ் ஷேட்ஸ் இருக்க நல்ல ரோல்.ஏன் இந்த படத்துக்கு ஒத்துக்கிட்டிங்கனு கேட்டேன் உங்கள ரொம்ப புடிக்கும்னு சொல்லி ஆப் பண்ணிட்டாரு.மாஸ்டர் உருவானதற்கு முழுக்காரணம் ஜெகதீஷ் தான் என்று தெரிவித்தார்.

லோகேஷ் கனகராஜ் மாநகரம்ல திரும்பி பார்க்க வெச்சாரு,கைதிய திரும்ப திரும்ப பார்க்க வெச்சாரு,மாஸ்டர்ல என்ன பண்ணப்போறாருன்னு பார்க்க நானும் வெயிட்டிங் என்று கூறிய தளபதி.தொகுப்பாளர் இளையதளபதி கிட்ட ஏதாவது கேட்கணும்னா என்ன கேட்பிங்கனு கேட்க அதற்கு பதிலளித்த விஜய் அப்போது இருந்த ரெய்டு இல்லாத நிம்மதியான வாழ்க்கையை கேட்பேன் என்று கூறினார்.இருந்தாலும் தற்போதுள்ள வாழ்க்கையும் ஜாலியாக உள்ளதாக தெரிவித்தார்.படத்தில் நிறைய பேர் வேலைசெய்துள்ளனர் நான் தற்போது அவர்களை பற்றி பேசப்போவதில்லை அவர்களது திறமை பேசும் என்று தெரிவித்தார்.

ஸ்டேஜில் சாந்தனு மற்றும் அனிருத்துடன் டான்ஸ் ஆடிய தளபதி விஜய் கடைசியாக விஜய் சேதுபதிக்கு முத்தத்தை திருப்பிக்கொடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.