தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

விழாவில் பேசிய விழா நாயகன் அனிருத் தனக்கு ஒரு பெரிய அங்கீகாரம்  கிடைத்தது கத்தி படத்தின் மூலம் தான் அதனை தொடர்ந்து இந்த படத்தில் தளபதி விஜயுடன் பணியாற்றியுள்ளேன்.மாஸ்டர் படத்தில் 12 பாடல்கள் உள்ளது என்றும் 8 இப்போது வெளியாகும் 2 வரும் நாட்களில் வெளியாகும் என்று தெரிவித்தார்.

தான் பணியாற்றியதிலேயே லோகேஷ் தான் மிகவும் கூலான இயக்குனர் என்று தெரிவித்தார்.இந்த படத்தில் வேலைபார்த்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்த அனிருத்,இந்த படத்தில் பாடல் பாடிய யுவன் மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் நன்றி எங்களுக்குள் எந்த ஈகோவும் இல்லை எனபது இதிலிருந்து தெரியும் என்று தெரிவித்தார்.