வாத்தி தான் டைட்டிலா வெச்சுருந்தோம் - லோகேஷ் கனகராஜ் !
By Aravind Selvam | Galatta | March 15, 2020 22:56 PM IST

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்
விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படம் தனக்கு அமைந்ததற்கு முக்கிய காரணமான நண்பர் ஜெகதீஷுக்கு நன்றி.தனது உதவி இயக்குனர்களை மேடையில் அழைத்து கௌரவப்படுத்தினார்.இந்த படத்திற்கு முதலில் வாத்தி என்று பெயரிட முடிவு செய்ததாக தெரிவித்தார் ஆனால் அடுத்ததாக மாஸ்டர் என்று முடிவு செய்தோம் என்று தெரிவித்தார்.
படத்தின் இன்ட்ரோ,இன்டெர்வல்,கிளைமாக்ஸ் தான் முதலில் வெளியான மூன்று போஸ்டர்கள் என்று தெரிவித்தார்.விஜய்சேதுபதியிடம் நான் முழுக்கதையை சொல்லவில்லை ஒரு லைன் சொன்னதுமே படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார்.இந்த படத்தில் இதுவரைக்கும் பார்க்காத விஜயை பார்க்கலாம் என்று தெரிவித்தார்.படத்தில் வேலை செய்த எனது நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி என்று தெரிவித்தார்.