தமிழ் திரையின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன் பிறவா அண்ணனாகவும் விளங்குபவர் தளபதி விஜய். தளபதி விஜயின் நிழலாக விளங்குபவர் தான் ஜகதீஷ். சினிமா காதலால், சினிமாவையே முழுநேர தொழிலாக கொண்டவர்களுள் ஜகதீஷும் ஒருவர்.

MasterAudioLaunch

செலிபிரிட்டி மேனேஜராக திரை வட்டாரத்தில் கால் பதித்து, இன்று தயாரிப்பாளராக உயர்ந்து நிற்கிறார் ஜகதீஷ். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய மாஸ்டர் திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்துள்ளார். நேற்று மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அசத்தலாக நடைபெற்றது. வழக்கம் போல் தளபதியின் குட்டி கதை, நடனம் என அரங்கம் அதிர்ந்தது. 

Jagdish jagadish

இதுகுறித்து ஜகதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், மாஸ்டர் ஆடியோ லான்ச் என் வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்றாகும். உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். இந்நிகழ்வின் மூலம் நீங்கள் என் மீது வைத்திருந்த அன்பை உணர முடிந்தது என பதிவு செய்துள்ளார் ஜகதீஷ்.