பிகில் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மாநகரம்,கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.ராக்ஸ்டார்அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத்,மாஸ்டர் மஹேந்திரன்,பிரிகிடா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

இந்த படத்தை  Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.டிக்டாக்,யூடியூப் என்று பல தளங்களில் பல சாதனைகளை இந்த படத்தின் பாடல்கள் நிகழ்த்தி வருகிறது.பட்டிதொட்டி எங்கும் இந்த பாடல்கள் ஓயாது ஒளித்து வருகின்றன.இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று படக்குழுவினர் ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர் இவரது போட்டோஷூட்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளும்.இன்ஸ்டாகிராம் சென்சேஷன் ஆக இருந்த மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் நடித்த பின் வேற லெவல் ரீச்சை பெற்று விட்டார்.தற்போது தனது பிகினி புகைப்படம் ஒன்றை மாளவிகா மோஹனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்,இதுவரை கவர்ச்சியாக போட்டோஷூட்களை வெளியிட்டு வந்த மாளவிகா முதல் முறையாக பிகினி புகைப்படத்தை பகிர்ந்துள்ளதால் ரசிர்கர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

🌊 📸 @amrithakarnakardesign

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on