96 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் நடிகை கௌரி கிஷன். பூச்செண்டு போல் இருக்கும் இவரது புன்னகைக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. சிறுவயது ஜானுவாக தோன்றி, இன்று தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் திரைப்படத்திலும் நடித்துள்ளார் கௌரி. 

gourikishan

இந்நிலையில் சமீபத்தில் நம் நாட்டில் நடந்த ஓர் சம்பவம் கௌரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மணிப்பூர் பகுதியை சேர்ந்த 20 வயது பெண் கடைக்கு சென்றபோது, அடையாளம் தெரியாத ஒருவரால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை கொரோனா என்று அழைத்து, அவர் மீது எச்சில் துப்பியுள்ளார். 

gourikishan Karnan

இதனைத்தொடர்ந்து நடிகை கௌரி கிஷன் தனது ஆதங்கமான பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் வெட்கக்கேடு...இந்த தருணம் இனவாதத்திற்கான நேரமில்லை. நாம் எல்லாரும் தான் கொரோனா பாதிப்பில் இருக்கிறோம். அதை மறந்து விடாதீர்கள் என்று பதிவு செய்துள்ளார். திரையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் ஹீரோயினாக திகழும் கௌரி கிஷனின் இந்த கொந்தளிப்பு நியாயம் தானே...