தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம் மாஸ்டர்.விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

கொரோனாவிற்கு பிறகு வெளியான பெரிய ஹீரோ படமான இந்த படம் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி என்று பல மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீசாகி அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் பல சாதனைகளை புடைத்திருந்தது.

இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.இந்த படத்தின் முக்கிய வேடத்தில் அப்புச்சி கிராமம் படத்தில் ஹீரோவாக நடித்த பிரவீன்குமார் ராஜேந்திரன் நடித்திருந்தார்.இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது,இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.பிரவீனுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.