மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் திருமணம் குறித்து கேள்வி.. - மாஸ் ரிப்ளே கொடுத்த கீர்த்தி சுரேஷ் ..! – வைரல் வீடியோ உள்ளே..

திருமணம் குறித்த கேள்விக்கு மாஸ் பதில் கொடுத்த கீர்த்தி சுரேஷ் வீடியோ உள்ளே - Keerthy suresh about marriage viral video here | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக தற்போது கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். தனித்துவமான நடிப்பு திறமையினால் பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பான் இந்திய திரைப்படமான தசரா திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு பாராட்டப்பட்டது. தற்போது கீர்த்தி ஸுரெஸ்ஜ்ஹ தெலுங்கில் போலா ஷங்கர் திரைப்படத்திலும் தமிழில், சைரன், ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே கீர்த்தி சுரேஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமூக கருத்தை பேசும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாஸில், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட நாள் கழித்து கீர்த்தி சுரேஷ் அவருக்கு தமிழில் வெளியாகும் திரைப்படமாக மாமன்னன் திரைப்படம் அமைந்துள்ளது. அதன்படி அவரது ரசிகர்கள் இப்படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது இந்த விழாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கீர்த்தி சுரேஷ் படம் குறித்து,

"ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமன்னன் ஒரு பெரிய படம். ரொம்ப நாள் கழிச்சு தமிழ் ல எனக்கு ஒரு ரிலீஸ். இப்படிப்பட்ட பெரிய படத்துல நான் இருக்கேன். இந்த படத்துல நான் கம்யூனிஸ்ட் வேறு ஒரு தளத்தில் வரும் படம். பொதுவான விஷயம் எல்லோராலுயும் தொடர்பு கொள்ள முடிகின்ற படம்.உதயநிதி சார் வடிவேல்  சாருடன் இணைந்து பணியாற்றியது ஜாலியா இருந்தது.”  என்று குறிப்பிட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்  தொடர்ந்து பத்திரிக்கையாளர் ஒருவர் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து கேட்கையில்,“ஏங்க.. என்னை கல்யாணம் பண்ணி கொடுக்கறதுலே இருக்கீங்க.. நடக்குற நேரத்துல நானே சொல்றேன்..” என்று கூறி மேடையிலிருந்து புறப்பட்டார். இது தொடர்பான வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சமீப காலமாக கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து இணையத்தில் பல வதந்திகள் பரவி வருகிறது. தனது நீண்ட கால நண்பரை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் என்ற வதந்தியும் இடையே பரவியது. இது குறித்து கீர்த்தி சுரேஷ் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. மேலும் கீர்த்தி சுரேஷ் அவர்களின் தந்தையும் வதந்தி தொடர்பாக விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றையும் சமீபத்தில் வெளியிட்டார். பல விளக்கங்கள் கொடுத்தும் கீர்த்தி சுரேஷ் அவரின் திருமணம் குறித்த வதந்திகள் இன்னும் பரவி வருகிறது.

பிரம்மாண்ட அரங்கில் உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ் - ARரஹ்மானின் மாமன்னன் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா! விவரம் இதோ
சினிமா

பிரம்மாண்ட அரங்கில் உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ் - ARரஹ்மானின் மாமன்னன் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா! விவரம் இதோ

மின்னல் முரளி, ஜெய ஜெய ஜெய ஜெய ஹே உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்
சினிமா

மின்னல் முரளி, ஜெய ஜெய ஜெய ஜெய ஹே உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்

சூப்பர் ஹீரோவாக கலக்க வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன்... சர்ப்ரைஸாக வந்த புது ப்ரோமோ வீடியோ இதோ!
சினிமா

சூப்பர் ஹீரோவாக கலக்க வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன்... சர்ப்ரைஸாக வந்த புது ப்ரோமோ வீடியோ இதோ!