இசைப்புயல் ARரஹ்மானின் இசை விருந்து... மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட பாடல்கள் இதோ!

மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படத்தின் ஜூக் பாகஸ் வெளியீடு,mari selvaraj in maamannan movie jukebox out now ar rahman | Galatta

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை விருந்தாக மாமன்னன் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போது வெளியானது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிய அடுத்த தனது கர்ணன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்த இயக்குனர் மாரி செல்வராஜின் மூன்றாவது திரைப்படமாக உருவாக்கி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வைகைப்புயல் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தமிழ் சினிமாவின் மிக முக்கிய தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராகவும் தற்போது பதவி வகிக்கித்து வருகிறார். நீண்ட நாட்களாகவே சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்திருந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தை தனது கடைசி திரைப்படம் என் அறிவுத்துள்ளார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள மாமன்னன் திரைப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் செல்வா.RK படத்தொகுப்பு செய்துள்ளார். மாமன்னன் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஜூன் மாதத்திலேயே படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாமன்னன் திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா தற்போது (ஜூன் 1) சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த பிரம்மாண்ட விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அட்டகாசமான இசை கச்சேரியும் நடைபெறுகிறது. இதுபோக திரை உலகைச் சார்ந்த முன்னணி பிரபலங்களான இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் போனி கபூர், எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் பா.ரஞ்சித், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் H.வினோத், இயக்குனர் பாண்டிராஜ், சிவகார்த்திகேயன், இயக்குனர் விக்னேஷ் சிவன், சூரி, இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், விஜய் ஆண்டனி, கவின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மாமன்னன் திரைப்படம் குறித்த முதல் அறிவிப்பு வெளியான சமயத்தில் இருந்தே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதில் வடிவேலுவின் லுக்கும் இன்னும் எதிர்பார்ப்புகளை கூட்டியது. இதனை அடுத்து இசைப்புயலின் இசையில் வைகைப்புயல் பாடி வெளிவந்த ராசா கண்ணு பாடல் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், இதுவரை பார்க்காத வடிவேலுவை பார்க்க போகிறோம் என்ற எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தற்போது குவிந்திருக்கிறது. முன்னதாக மாமன்னன் படத்தின் பாடல்களான “கொடி பறக்குற காலம்” , “நெஞ்சமே நெஞ்சமே” , “உச்சந்தல” , “மன்னா மாமன்னா” , “வீரனே” , “ராசா கண்ணு” , “ஜிகு ஜிகு ரயிலு” என ஏழு பாடல்கள் கொண்ட பட்டியலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இந்த ஏழு பாடல்கள் கொண்ட JUKEBOX தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மாமன்னன் திரைப்படத்தில் அந்த பாடல்களை கீழே உள்ள லிங்கில் கேட்டு மகிழுங்கள்.
 

உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் எத்தனை பாடல்கள்?- இசை வெளியீட்டிற்கு முன் முழு பட்டியலை வெளியிட்ட ARரஹ்மான்!
சினிமா

உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் எத்தனை பாடல்கள்?- இசை வெளியீட்டிற்கு முன் முழு பட்டியலை வெளியிட்ட ARரஹ்மான்!

தளபதி விஜயின் மகள் திவ்யா சாஷாவிற்கு மாலை அணிவித்து பாராட்டிய அவரது மகன் ஜேசன் சஞ்சய்... காரணம் இதுதான்! ட்ரெண்டிங் வீடியோ உள்ளே
சினிமா

தளபதி விஜயின் மகள் திவ்யா சாஷாவிற்கு மாலை அணிவித்து பாராட்டிய அவரது மகன் ஜேசன் சஞ்சய்... காரணம் இதுதான்! ட்ரெண்டிங் வீடியோ உள்ளே

ஆர்யாவின் அதிரடியான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... ட்ரெண்டாகும் ரொமான்டிக்கான புது ப்ரோமோ இதோ!
சினிமா

ஆர்யாவின் அதிரடியான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... ட்ரெண்டாகும் ரொமான்டிக்கான புது ப்ரோமோ இதோ!