கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சதுரங்க வேட்டை. நட்டி நட்ராஜின் அசத்தலான நடிப்பால் இந்த படம் மிகப்பெரிய ஹிட்டானது. பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான மனோபாலா இந்த படத்தை தயாரித்தார். 

sathurangavettai

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஆக்டிவாக இயங்கி வருகின்றனர்.

manobala Manobala

இந்நிலையில் நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த ஃபோட்டோவில் தளபதி விஜய் சதுரங்க வேட்டை படத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் பார்க்கும் போது பிடித்த புகைப்படத்தை மனோபாலா பகிர்ந்துள்ளார். நடிகர் மனோபாலா நண்பன், துப்பாக்கி உள்ளிட்ட படங்களில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.