தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

manobala

பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா மற்றும் சரவணன் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

kamal

இயக்குனர் மற்றும் நடிகரான மனோபாலா கலாட்டா குழுவிற்கு அளித்த பேட்டியில், பிக்பாஸ் ஸ்கிரிப்ட் தான் என்றும், கஸ்தூரி வெளியே இருக்கும் வரை அவ்வளவு கருத்து சொல்லிவிட்டு உள்ளே சென்றவுடன் முழித்து கொண்டிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கன்டென்ட் இல்லை. நயன்தாரா மாதிரி ஒரு பெண் போனால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.