கடந்த 1995-ம் ஆண்டு மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மஞ்சு வாரியர். தொடர்ந்து பல வெற்றித்திரைப்படங்களில் நடித்தவர், கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் தமிழில் அறிமுகமானார். நடிப்பை தாண்டி நடனம், பாடல் என பன்முகத்திறமை கொண்டவர் மஞ்சு வாரியர். 

Manju Warriers Kayattam First Look Poster

இவரது நடிப்பில் சதுர் முகம், தி ப்ரீஸ்ட், லலிதம் சுந்தரம் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகிறது. 
தற்போது மஞ்சுவாரியர் நடிக்கும் மலையாள படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த போஸ்டரில் அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருக்கிறார் மஞ்சு.

Manju Warriers Kayattam First Look Poster

கயட்டம் என்ற திரைப்படத்தின் போஸ்டரில் மாடர்ன் உடையில், கண்களில் கண்ணாடி அணிந்து, பணிக்கு நடுவில் அமர்ந்திருக்கிறார். சணல் குமார் சசிதரன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த கயட்டம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. நிச்சயம் இப்படம் வித்தியாசமாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.