மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். அதனைத்தொடர்ந்து 2015-ம் ஆண்டு ஒரு வடக்கன் செல்ஃபி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் STR உடன் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் கால்பதித்த மஞ்சிமாவிற்கு உலகளவில் ரசிகர்கள் குவிந்தனர். அவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. சென்ற வருடம் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான தேவராட்டம் படத்தில் நடித்திருந்தார்.

கொரோனா லாக் டவுன் காரணமாக தற்போது படப்பிடிப்பு இல்லை என்பதால் தன் வீட்டில் நேரத்தை செலவிட்டு வருகிறார் மஞ்சிமா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் மீண்டும் ஷூட்டிங் செல்ல மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய டீனேஜ் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தற்போது இணையத்தில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது. புகைப்படத்தை வெளியிட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே கிட்டத்தட்ட 97 ஆயிரம் லைக்குகள் குவிந்துள்ளது. பலரும் மஞ்சிமா மோகன் பழைய புகைப்படத்தை பார்த்து அவரது தோற்றத்தைப் பற்றி மிகவும் வியந்து பேசி வருகின்றனர். 2010-ல் மஞ்சிமா தனது தோழிகளுடன் எடுத்துக்கொண்ட போட்டோ தான் அது.

லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் துக்ளக் தர்பார் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் மஞ்சிமா. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, அதிதிராவ் ஹய்தாரி நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். இது தவிர்த்து மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் எஃப்.ஐ.ஆர் படத்திலும் நடிக்கிறார் மஞ்சிமா மோகன்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#throwbackto2010❤️

A post shared by manjima mohan (@manjimamohan) on