தமிழ்மொழியில் ஈடுஇணையற்ற எழுத்தாளர்களில் ஒருவராக பல எழுத்தாளர்களுக்கு முன்னோடியாகவும் வாசகர்கள் மனம் விரும்பும் எழுத்தாளராகவும் திகழ்ந்தவர் கல்கி. கல்கியின் பெயரைச் சொன்னாலே உடனே பொன்னியின் செல்வன் பெயரும் சேர்ந்தே வரும். தமிழ்மொழியின் இன்றியமையாத பல புத்தகங்களில் முதன்மை இடத்தில் இருக்கும் ஒரு படைப்பு பொன்னியின் செல்வன்.

தமிழ் திரை உலகில் எத்தனையோ ஜாம்பவான்கள் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க பல முயற்சிகள் செய்து தோல்வியுற்ற நிலையில் தற்போது இந்தியாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் அதை சாத்தியப் படுத்தியிருக்கிறார். தனது தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து பொன்னியின் செல்வனை உருவாக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்தினம்.

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இந்திய திரைப்படங்களில் மிகவும் பிரம்மாண்டமான திரைப்படமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், பிரபு, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், கிஷோர், அஷ்வின், நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, லால், சாரா அர்ஜுன் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முன்னணி கலை இயக்குனர் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயமோகன் அவர்கள் பொன்னியின் செல்வன் வசனங்களை எழுதி உள்ளார். படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து மிகுந்த எதிர்பார்ப்புகளோடு ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில் என்று பொன்னியின் செல்வன் படத்திலிருந்து முக்கிய தகவல் வெளியானது.

ஐந்து பாகங்களை உள்ளடக்கிய பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன்  திரைப்படத்தின் முதல் பாகத்தின் டைட்டில் போஸ்டராக PS-I என்ற இந்த போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மிரட்டலான இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. மிரட்டலான அந்த போஸ்டர் இதோ…