"பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் LOADING!"- மிரட்டலான வீடியோவோடு வந்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!

பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு,Mani ratnam in ponniyin selvan 2 trailer announcement video | Galatta

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து ஆல் டைம் ரெக்கார்ட்டாக சாதனை படைத்த திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் 1. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு முன்னணி நட்சத்திர பட்டாளம் ஒன்றிணைந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கினார். ஈடு இணையற்ற நாவல்களில் ஒன்றாக அட்டகாசமான வரலாற்று புனைவு நாவலாக புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் திரைப்படம் தயாராகியுள்ளது. பல முன்னணி ஜாம்பவான்களும் முயற்சி செய்து கைவிட்ட இந்த பொன்னியின் செல்வன் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரோடக்சன் பிரம்மாண்ட தயாரிப்பில் தனது விடா முயற்சியோடு கடின உழைப்போடு  அட்டகாசமான கலை படைப்பாக செதுக்கி இருக்கிறார் மணிரத்னம்.

பொன்னியின் செல்வன் நாவல் இத்தனை தூரம் ரசிகர்களின் அபிமானமான நாவலாக மாற முக்கிய காரணமாக அமைந்த விஷயங்களில் முக்கியமானது, அதன் கதாபாத்திரங்கள் தான். அந்த வகையில், ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்களது அசாத்திய நடிப்பால் ரசிகர்களின் மனதை வெல்ல மறுபுறம் தொழில்நுட்ப ரீதியாகவும் பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது. தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் அவர்களின் பட்டத்தொகுப்பில் உருவான இந்த பொன்னியின் செல்வன் எனும் வைர திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையால் பட்டைத்தீட்டி இருக்கிறார்.  கடந்த 2022ம் ஆண்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி கொண்டாடப்பட்ட பொன்னியின் செல்வன் 1 பட வெற்றியைத் தொடர்ந்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 பட முதல் பாடலான அக நக பாடல் ரசிகர்களின் மனதை வருடியது. இந்நிலையில் ட்ரெய்லர் மற்றும் இதர அறிவிப்புகளுக்காக ஆவலோடு காத்திருந்த நிலையில், காத்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் ஆதித்த கரிகாலனாக சீயான் விக்ரம் தயாராகும் காட்சிகளோடு, ட்ரெய்லர் தயாராகி வருவதாக தெரிவிக்கும் வகையில் "TRAILER LOADING" என குறிப்பிட்டு படக்குழுவினர் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். மிரட்டலான அந்த வீடியோ இதோ…
 

மீண்டும் சர்ச்சையில் இயக்குனர் பாலாவின் ‘வணங்கான்’ - நடிகையை தாக்கிய பரபரப்பு சம்பவம்.. விவரம் இதோ..
சினிமா

மீண்டும் சர்ச்சையில் இயக்குனர் பாலாவின் ‘வணங்கான்’ - நடிகையை தாக்கிய பரபரப்பு சம்பவம்.. விவரம் இதோ..

“Adjustment பண்ணா நிறைய வாய்ப்பு கிடைக்கும்” உண்மையை உடைத்த நடிகை ரேஷ்மா பிரசாத்  - முழு வீடியோ இதோ..
சினிமா

“Adjustment பண்ணா நிறைய வாய்ப்பு கிடைக்கும்” உண்மையை உடைத்த நடிகை ரேஷ்மா பிரசாத் - முழு வீடியோ இதோ..

“ஜிகர்தண்டா Double X படத்தில் இப்படிதான் Music இருக்கும்” சந்தோஷ் நாராயணன் – சுவாரஸ்யமான தகவல்களுடன் வைரலாகும் முழு வீடியோ இதோ..
சினிமா

“ஜிகர்தண்டா Double X படத்தில் இப்படிதான் Music இருக்கும்” சந்தோஷ் நாராயணன் – சுவாரஸ்யமான தகவல்களுடன் வைரலாகும் முழு வீடியோ இதோ..