கேரளா சின்னத்திரையின் பிரபலமாக இருக்கும் நபர்களில் ஒருவர் நிமிஷா பிஜோ.சில சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக உருவெடுத்தார் நிமிஷா பிஜோ.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை பகிர்ந்து வருவார் நிமிஷா பிஜோ.

சமீபத்தில் அரன்முலா கோயிலுக்கு சொந்தமான பாம்பு வடிவிலான படகில் நடிகை நிமிஷா பிஜோபோட்டோஷூட் ஒன்றை செய்துள்ளார்.பம்பை ஆற்றில் சாமி ஊர்வலத்தின்போது பயன்படுத்தப்படும் அந்த படகில் ஏறி புகைப்படங்களை எடுத்து அதனை பதிவிட்டுள்ளார். அப்போது அவர் காலில் செருப்பும் அணிந்து இருந்தார்.

இவரது இந்த போட்டோஷூட் செம வைரலாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.பலரும் இந்த போட்டோஷூட்டிற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.இதை அடுத்து கேரள தேவஸ்தானம் நிமிஷா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்தனர்.

இந்த விவகாரத்தில் நிமிஷாவை போலீசார் கைது செய்துள்ளனர்.அந்த படகு புனிதமானது என்று தனக்கு தெரியாது இனி இதுபோன்ற தவறு நடக்காது என்று நிமிஷா போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளார். அதன்பிறகு அவருக்கு இந்த வழக்கில் பெயில் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.