மலையாள திரையுலகின் சிறந்த நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கம்மட்டிபாடம் திரைப்படம் மூலம் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தவர், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். 

Manikandan

இவருக்கும் இவரது காதலி அஞ்சலிக்கும் பெரியோர்களால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் திருமணம் நடைபெறுமா என்ற நிலை இருந்தது. இந்நிலையில் வெகு சில உறவினர்கள் முன்னிலையில் ஒரு கோயிலில் அவர் தன் காதலியை கரம் பிடித்தார். 

Manikandan

திருமணத்திற்காக வைத்திருந்த பணத்தை கொரோனா நிதியாக முதல்வருக்கு அனுப்பி வைத்தார் மணிகண்டன். இந்நிகழ்வு ரசிகர்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அழகான தம்பதியை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா. சீனுராமசாமி இயக்கியுள்ள மாமனிதன் படத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்துள்ளார் மணிகண்டன்.