மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் வெளிவந்த அங்கமாலி டைரீஸ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆண்டனி வர்கீஸ். அங்கமாலி டைரீஸ் திரைப்படத்தில் நடிகர் ஆண்டனி வர்கீஸின் எதார்த்தமான நடிப்புக்கு பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிஸ்செரி இயக்கிய ஜல்லிக்கட்டு திரைப்படத்திலும் இறைச்சிக் கடை நடத்துபவராக நடித்த ஆண்டனி வர்கீஸின் நடிப்பு பலரால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. தொடர்ந்து அஜகஜனதரம் மற்றும் ஆனபரம்பிலே வேர்ல்ட் கப் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர தயாராகி வருகின்றன. 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் ஆண்டனி வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக பேசப்பட்டது ஆனால் சில காரணங்களால் அது நடைபெறாமல் போனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நடிகர் ஆண்டனி வர்கீஸின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. குழந்தைப் பருவத்திலிருந்து தனது நெருங்கிய தோழியும் காதலியுமான அனிஷா பாலோஸ் என்பவரை நடிகர் ஆண்டனி வர்கீஸ் திருமணம் செய்து கொள்ள உள்ளார். செவிலியரான அனிஷா பாலோஸ் மற்றும் நடிகர் ஆண்டனி வர்கீஸ் இருவரின் நிச்சயதார்த்த நிகழ்வான ஹல்டி நிகழ்ச்சி என்று நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.