கடந்த 2013-ம் ஆண்டு வெளியான பட்டம் போலே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோஹனன். அதைத்தொடர்ந்து கன்னட, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்தார். தமிழில் பேட்ட படத்தில் அறிமுகமான மாளவிகா மோஹனன், தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார். இவருக்கென ரசிகர் பட்டாளமே உருவானது. 

Malavika Mohanans Insta Post On Kicking Covid19

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். XB பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஷாந்தனு, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

Malavika Mohanans Insta Post On Kicking Covid19

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் மாளவிகா மோஹனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எட்டி உதைக்கும் GIF பதிவை வெளியிட்டுள்ளார். COVID 19 எனப்படும் கொரோனா வைரஸை இப்படி தான் உதைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Me to covid19

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on