தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

lokeshkanagaraj master

டெல்லி கல்லூரியில் நடந்த படப்பிடிப்பில் VJ ரம்யா, 96 புகழ் கௌரி கிஷன், இணையதள புகழ் பிரிகிடா போன்றோர் நடித்தனர். ஷிவமோகா படப்பிடிப்பு முடிந்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அரசியல் வாதியாக நடிக்கிறார் என்று பேசப்படுகிறது. படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. படத்தின் விநியோக உரிமையை செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் மாதம் வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 

kumohanan

தற்போது சென்னை காசிமேடு மற்றும் ராயபுரத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் முக்கியமான ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு மாளவிகா மோஹனனின் தந்தை KU மோஹனன் வந்திருந்தார். இந்திய சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.