மலையாள திரையுலகில் பட்டம் போலே என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதனைத்தொடர்ந்து கன்னடத்தில் ஒரு படம், பின்னர் ஹிந்தியில் பியாண்ட் தி க்ளவுட்ஸ் படத்தின் மூலமாக பாலிவுட்டிலும் கால் பதித்தார். அதன்பின் பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் மாளவிகா. 

கொரோனா காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் மாளவிகா, சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

இந்நிலையில் மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புதிய போட்டோ ஒன்றை வெளியிட்டார். இதன் கமன்ட் பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட நபர், உங்கள் Ex Lover-ஐ கண்ணாபிண்ணாவென திட்ட வேண்டுமா,  அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். நாங்கள் அதை பதிவிடுகிறோம் என கமன்ட் செய்ய, அதை பார்த்த மாளவிகா, கண்டிப்பாக... முடிந்த வரையில் இன்று இரவுக்குள் அனுப்பிவிடுகிறேன் என பதிலளித்துள்ளார். மாளவிகாவின் இந்த பதிலடியை பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள். 

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்னரே தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளார். தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் இந்த படம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. 

இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை லாக்டவுனில் துவங்கினர் படக்குழுவினர். ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் பாடல்களின் கரோக்கி வெர்ஷனும் வெளியானது. ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு தான் இருக்கின்றன. படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் மாமாவுமான சேவியர் பிரிட்டோ, என்ன நடந்தாலும் மாஸ்டர் படம் தியேட்டரில் தான் ரிலீஸ் ஆகும் என்பதை உறுதி செய்தார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Hello 🍃

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on