சூப்பர் டீலக்ஸ் படத்தில் இந்த காட்சி அமையவில்லை ! வெளியான வீடியோ
By Sakthi Priyan | Galatta | April 18, 2019 16:00 PM IST

தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சீராக ஓடிய படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். ஃபஹத் ஃபாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின், அஸ்வந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
படத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. ஷில்பா எனும் பாத்திரத்தில் பட்டையை கிளப்பினார் நடிகர் விஜய்சேதுபதி.
தற்போது விஜய்சேதுபதி ஷில்பா கெட்டப்பில் நடிகை காயத்ரியுடன் ஆடுவது போன்ற வீடியோ வெளியானது. இருவரின் அசத்தலான நடனம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.