தமிழ் சினிமாவின் இன்றியமையாத நடிகராக மாறிவிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இப்போது கோலிவுட் மட்டுமல்லாமல் மாலிவுட் , டோலிவுட், பாலிவுட் வரை சென்று விட்டார்.  தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்த உப்பென்னா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து மலையாளத்தில் 19(1)(a) திரைப்படம் விரைவில் வெளிவர தயாராகி வருகிறது.

மேலும் தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ஆக தயாராகும் மும்பைகார் திரைப்படத்தில் தமிழில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்திருக்கும் விஜய் சேதுபதி உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் திரைப்படத்திலும்  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது தவிர இயக்குனர் மணிகண்டனின் கடைசி விவசாயி, இயக்குனர் சீனு ராமசாமியின் மாமனிதன், இயக்குனர் விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல், இயக்குனர் S.P.ஜனநாதனின் லாபம் உள்ளிட்ட திரை படங்கள் அடுத்தடுத்து வெளிவரவுள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் மக்கள் செல்வன்.

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் தயாராகும் விஜய்சேதுபதி 46 படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல நடிகை அனுகிரீதி கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் டிவி குக் வித் கோமாளி புகழ் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி 46 படப்பிடிப்பின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் மாஸ்ஸான அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாடி வருகிறது. அந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Riyazul Hussain (@riyaz_ctc)