மலேசியாவில் மக்கள் செல்வனை காண திரண்ட ரசிகர்கள்... விஜய் சேதுபதி51 பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ!

விஜய் சேதுபதி 51 படத்தின் ஷூட்டிங்கில் குவிந்த மக்கள்,makkal selvan vijay sethupathi surrounded by his fans at malysia | Galatta

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது மலேசியாவில் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அவரை காண திரளான ரசிகர்கள் ஒன்றிணைந்துள்ளனர். முன்னதாக தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலீஸுக்காக காத்திருந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. தொடர்ந்து தனது முதல் படமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாரான மும்பைக்கர் படத்தில் தமிழில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த மும்பைக்கர் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரடியாக ஜியோ சினிமா தளத்தில் ரிலீஸ் ஆனது.

முன்னதாக ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் இயக்குனர்களான ராஜ் மற்றும் டி கே ஆகியோருடன் இணைந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ஃபர்ஸி என்ற ஹிந்தி வெப் சீரிஸ் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக பாலிவுட் திரையுலகில் மக்கள் செல்வன் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், ஏஜென்ட் வினோத், அந்தாதுன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகும் மேரி கிறிஸ்மஸ் எனும் ஹிந்தி திரைப்படத்தில் கத்ரீனா கைஃப் உடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்துள்ளார். முன்னதாக காந்தி டாக்ஸ் எனும் மௌனப் படத்திலும், முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி இயக்குனர் அட்லி முதல் முறை பாலிவுட்டில் இயக்குனராக களமிறங்கி இருக்கும் ஜவான் திரைப்படத்திலும் நடித்துள்ளார். ஷாரூக் கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் தனது திரைப் பயணத்தில் 51 வது திரைப்படமாக தயாராகி வரும் விஜய் சேதுபதி 51 படத்தில் தற்போது மக்கள் செல்வன் நடித்து வருகிறார். கடந்த 2018ல் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குனர் ஆறுமுக குமாருடன் மீண்டும் இணைந்து இருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் இணைந்து யோகி பாபு மற்றும் ருக்மணி வசந்த் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப் பூஜை கடந்த மாதம் (மே 19) மலேசியாவில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்றுள்ளது. காக்கா முட்டை படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி திரைப்படத்தை வெளியிட்ட 7Cs என்டர்டைன்மென்ட் நிறுவனம் தனது 5வது தயாரிப்பாக இந்த புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மலேசியாவில் படப்பிடிப்பு தளத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை காண ரசிகர்கள் திரண்டனர். இதனை அடுத்து வழக்கம்போல் தனது ஸ்டைலில் ரசிகர்களுடன் இறங்கி அவர்களுக்கு கைகுலுக்கி, அவர்களோடு செல்ஃபி எடுத்து, பேசி, ஒட்டு மொத்த ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார் மக்கள் செல்வன். விஜய் சேதுபதி 51 படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் திரண்ட புகைப்படங்களும் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் & வீடியோ இதோ…
 

Sea of love! Fans, cutting across borders, continue to pour their love out for #MakkalSelvan @VijaySethuOffl! Here's a clip & pictures showing fans expressing their love for him in Malaysia where he is currently shooting for his 51st film. #Vijaysethupathi51@7CsPvtPtepic.twitter.com/aSAzOKPjpz

— UV Communications (@UVCommunication) June 8, 2023

SJசூர்யா - பிரியா பவானி சங்கரின் பொம்மை... மான்ஸ்டர் வெற்றி கூட்டணியின் அசத்தலான இந்த காதலில் வீடியோ பாடல் இதோ!
சினிமா

SJசூர்யா - பிரியா பவானி சங்கரின் பொம்மை... மான்ஸ்டர் வெற்றி கூட்டணியின் அசத்தலான இந்த காதலில் வீடியோ பாடல் இதோ!

தல MSதோனி தயாரிப்பில் முதல் தமிழ் படம் LGM... ஹரிஷ் கல்யாண் - 'லவ் டுடே' இவானா காம்போவின் கலக்கலான டீசர் இதோ!
சினிமா

தல MSதோனி தயாரிப்பில் முதல் தமிழ் படம் LGM... ஹரிஷ் கல்யாண் - 'லவ் டுடே' இவானா காம்போவின் கலக்கலான டீசர் இதோ!

ஆர்யாவின் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ஸ்பெஷல் ட்ரீட்… ரொமான்டிக்கான கறிக்கொழம்பு வாசம் வீடியோ பாடல் இதோ!
சினிமா

ஆர்யாவின் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ஸ்பெஷல் ட்ரீட்… ரொமான்டிக்கான கறிக்கொழம்பு வாசம் வீடியோ பாடல் இதோ!