தமிழகத்தில் 2021ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறுகிறது.மக்கள் தங்கள் ஓட்டுக்களை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.பலரும் தங்கள் வாக்குகளை விறுவிறுப்பாக செலுத்தி வருகின்றனர்.

மக்களுடன் இணைந்து அரசியல் பிரமுகர்கள்,சினிமா நட்சத்திரங்கள் என்று பலரும் தங்கள் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.தற்போது நிலவி வரும் கொரோனா சூழல் காரணமாக வாக்காளர்கள் மாஸ்க் போன்ற பாதுகாப்பு உபகாரணங்களோடு வந்து வாக்களித்து வருகின்றனர்.

திரை நட்சத்திரங்கள் தங்கள் வாக்குகளை விறுவிறுப்பாக செலுத்தி வருகின்றனர்.இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் பரப்பாக நடைபெற்று வருகிறது.50%துக்கும் மேலான வாக்குகள் பதிவாகி உள்ளன.தற்போது மக்கள்செல்வன் விஜய்சேதுபதி தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

விஜய்சேதுபதி தனது வாக்கினை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பதிவுசெய்துள்ளார்.பதிவுசெய்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த விஜய்சேதுபதி,மக்கள் அனைவரும் ஜாதி,மதம் போன்றவற்றை தவிர்த்து வாக்களிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார் எப்போதும் இது தான் தனது தேர்தல் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.