மீசைய முறுக்கு, நட்பே துணை போன்ற வெற்றி படங்களுக்கு பிறகு ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த படம் நான் சிரித்தால். இந்த படத்தை அவ்னி சினிமேக்ஸ் சார்பில் இயக்குனர் சுந்தர்.சி தயாரித்திருந்தார். அறிமுக இயக்குனர் ராணா இயக்கியிருந்தார்.

adhi hiphopadhi

இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாக தமிழ் படம் 2 புகழ் ஐஸ்வர்யா மேனன் நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பிரேக்கப் பாடல், தோம் தோம், ஹாப்பி பர்த்டே பாடல் இளைஞர்களின் ப்லேலிஸ்டை ஆட்சி செய்கிறது.  

raana

நேற்று வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் உருவானது குறித்தும், படத்தின் ட்ரைலரை பார்த்து விட்டு தளபதி விஜய் பாராட்டியது குறித்தும் இயக்குனர் ராணா கலாட்டா வாயிலாக பதிவு செய்துள்ளார். இயக்குனர் ஷங்கருடன் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் பேசியுள்ளார்.