தமிழில் இயக்குனர் சமுத்திரக்கனி நடித்த சாட்டை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மஹிமா நம்பியார். தொடர்ந்து குற்றம் 23, புரியாத புதிர், அசுரகுரு என தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வரும் மஹிமா நம்பியார் தற்போது சிறந்த துணை நடிகைக்கான சர்வதேச விருது பெற்றுள்ளார். 

நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்த மௌனகுரு திரைப்படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மகாமுனி. நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் மகாமுனி திரைப்படத்தில் நடிகைகள் மஹிமா நம்பியார் மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குனர் சாந்தகுமார் எழுதி இயக்கிய மகாமுனி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் S.தமன் இசையமைக்க, அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்திருந்தார். சிறந்த திரைப்படமாக பலராலும் பாராட்டப்பட்ட மகாமுனி திரைப்படம் தற்போது பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் & நடிகை உள்ளிட்ட பல பிரிவுகளில் மகாமுனி திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் சிறந்த துணை நடிகைக்கான விருதை நடிகை மஹிமா நம்பியார் வென்றுள்ளார். மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்ற நடிகை மஹிமா நம்பியார் திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.