மனதை மயக்கும் மஹிமாவின் டான்ஸ் வீடியோ !
By Sakthi Priyan | Galatta | April 18, 2020 11:11 AM IST

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் இளம் கதாநாயகிகளுள் ஒருவர் நடிகை மஹிமா நம்பியார். 2012-ம் ஆண்டு சாட்டை படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து குற்றம் 23, கொடிவீரன், அண்ணனுக்கு ஜே போன்ற படங்களில் நடித்து அசத்தினார். சமீபத்தில் வெளியான மகாமுனி திரைப்படம் இவருக்கு சிறந்த பெயரை பெற்றுத்தந்தது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரைக்கும் இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, நடனம் பாடல் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மஹிமா தனது ட்விட்டர் பக்கத்தில் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். விக்ரம் பிரபு நடித்த அசுரகுரு படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மஹிமா.
When boredom hits you hard 💃 pic.twitter.com/PmfAkNFVr2
— Mahima Nambiar (@Mahima_Nambiar) April 18, 2020
Sivakarthikeyan's Hero removed from Amazon Prime Video - fans shocked!
18/04/2020 01:33 PM
WOW: SS Rajamouli confirms his next with Mahesh Babu! Exciting details inside!
18/04/2020 12:39 PM