தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மகேஷ்பாபு.மாஸ் ஹீரோவாக உருவெடுத்து தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டாராக அசத்தி வருகிறார் மகேஷ்பாபு.கடைசியாக இவர் நடிப்பில் Sarileru Neekevvaru படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் உருவாகி வரும் Sarkaru Vaari Paata படத்தில் நடித்து வருகிறார்.கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து மகேஷ்பாபு தனது 28ஆவது படத்தில் நடித்து வருகிறார்.SSMB28 என்று தற்காலிகமாக பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் த்ரிவிக்ரம் இயக்குகிறார்.மூன்றாவது முறையாக மகேஷ்பாபு த்ரிவிக்ரமுடன் இணைவதால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இன்று மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பணிபுரியும் கலைஞர்கள் மற்றும் ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.பூஜா ஹெக்டே இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.செம வீடியோவாக வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.