தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் ஸ்ரீமந்துடு.கொரட்டால சிவா இந்த படத்தை இயக்கியிருந்தார்.தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Mahesh Babu Srimanthudu 100 Million Views Youtube

ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.ஜெகபதி பாபு,சுகன்யா,கிஷோர்,ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் மகேஷ் பாபுவின் GMB நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தனர்.

Mahesh Babu Srimanthudu 100 Million Views Youtube

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் திரையரங்குகளில் வசூல்வேட்டை நடத்தியது.இதனை தொடர்ந்து இந்த படம் யூடியூபில் சாதனை படைத்துள்ளது.யூடியூப்பில் வெளியான இந்த படம் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.