மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா டைட்டில் பாடல் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | April 23, 2022 12:33 PM IST
தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை அடுத்து தனது 36ஆவது படத்தில் மஹரிஷி பட இயக்குனர் வம்சியுடன் இணைகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.
இதனை தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் Sarkaru Vaari Paata படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் .இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.அதோடு இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் செம ஹிட் அடித்து வருகிறது.இந்த படம் மே 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.தற்போது இந்த படத்தின் டைட்டில் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளனர்.அதிரடியான இந்த பாடல் ரசிகர்களிடம் பெரிய ஆதரவை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்
An exciting announcement on Sarkaru Vaari Paata - super happy news for fans!
21/04/2022 02:38 PM
NEW UPDATE on SARKARU VAARI PAATA -much-awaited news for all Mahesh Babu fans!
18/04/2022 06:01 PM
Mahesh Babu's Sarkaru Vaari Paata touches the finish line | Exciting update out
12/04/2022 07:09 PM