மகேஷ் பாபு படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் இதோ !
By Aravind Selvam | Galatta | May 13, 2022 16:36 PM IST

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை அடுத்து தனது 36ஆவது படத்தில் மஹரிஷி பட இயக்குனர் வம்சியுடன் இணைகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.
இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் தயாராகியுள்ள Sarkaru Vaari Paata படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.சமுத்திரக்கனி,நதியா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இந்த படம் மே 12ஆம் தேதி மிக ப்ராம்மணடமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பெரிய வரவேற்புடன் வெளியான இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.இந்த படம் உலகம் முழுவதும் 75 கோடிகளை வசூல் செய்துள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளனர்.இந்த படம் வசூல் சாதனை குவித்து வருவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Box Office Veta Shuru 💥💥
— GMB Entertainment (@GMBents) May 13, 2022
ALL TIME RECORD for #SVP
75 Crores gross worldwide on Day 1 for #SarkaruVaariPaata#BlockbusterSVP #SVPMania
Super 🌟 @urstrulyMahesh @KeerthyOfficial @ParasuramPetla @MusicThaman @14ReelsPlus @GMBents @MythriOfficial @saregamasouth pic.twitter.com/EK76GVLEGX