தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை அடுத்து தனது 36ஆவது படத்தில் மஹரிஷி பட இயக்குனர் வம்சியுடன் இணைகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இதனை தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் தனது 37ஆவது படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.Sarkaru Vaari Paata என்று இந்த படத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர்.இந்த படத்தின் ப்ரீலுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் என்றும் முக்கிய வேடத்தில் நிவேதா தாமஸ் நடிக்கிறார் என்று தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இது குறித்து படக்குழுவினர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.மகேஷ்பாபு பிறந்தநாள் அன்று இந்த படம் குறித்த ஏதேனும் ஒரு அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா காரணமாக வீட்டிலேயே இருப்பதால் பிரபலங்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.மகேஷ்பாபுவும் தனது மகள் மற்றும் மகனுடன் விளையாடும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்து வந்தார்.சமீபத்தில் மகேஷ் பாபு ட்விட்டரில் ஒரு 10 மில்லியன் ரசிகர்களை பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை படைத்திருந்தார்.

இவர் தனது மகனுடனும்,மகளுடனும் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வந்தன.கொரோனா காரணமாக கடந்த எட்டு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது.அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்து ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டு பழைய படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.தீபாவளிக்கு சில புதிய படங்கள் வெளியாகவுள்ளன.இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் திறந்ததும் முதல் படமாக மகேஷ் பாபுவின் Sarileru Neekevvaru படம் டப் செய்யப்பட்டு வெளியாகும் என்ற அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது,தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டதை அடுத்து இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.