தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சரிலேரு நீக்கவ்வரு. முன்னணி தெலுங்கு இயக்குனரான அனில் வரிப்புடி சரிலேரு நீக்கவ்வரு திரைப்படத்தை இயக்கினார். இதனையடுத்து தற்போது நடிகர் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் சர்காரு வாரி பாட்டா.

பிரபல இயக்குனர் பரசுராம் எழுதி இயக்கும் சர்காரு வாரி பாட்டா படத்தில் ஒளிப்பதிவாளர் மதி ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் தமன் இசை அமைக்கிறார். சர்காரு வாரி பாட்டா படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். 

சர்காரு வாரி பாட்டா படத்தை நடிகர் மகேஷ் பாபுவின் G.மகேஷ்பாபு என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக சர்காரு வாரி பாட்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. 

இந்நிலையில் சர்காரு வாரி பாட்டா படத்தின் டீஸர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மகேஷ்பாபுவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 9ஆம் தேதி சர்காரு வாரி பாட்டா படத்தின் டீசர் ரிலீசாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. எனவே மகேஷ்பாபுவின் ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்டாக இந்த டீசர் அமையும் என்பதில்  எந்த சந்தேகமும் இல்லை.