தெலுங்கு திரை உலக ரசிகர்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த பழம்பெரும் நடிகரும் நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா அவர்கள் காலமானார். நவம்பர் 14ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நடிகர் கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி தற்போது காலமானார். 

மறைந்த நடிகர் கிருஷ்ணாவுக்கு வயது 79. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் நடிகர் மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி அவர்கள் காலமானார். முன்னதாக கடந்த ஜனவரியில் மகேஷ்பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபுவும் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது தந்தையின் மறைவால் வாடும் நடிகர் மகேஷ்பாபு அவரது மறைவுக்கு பிறகு முதல்முறையாக எமோஷனலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,
“உங்கள் வாழ்க்கை கொண்டாடப்பட்டது.. உங்களது இறப்புக்கு பிறகும் இன்னும் கொண்டாடப்படும்.. பயமற்றவராக உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்தீர்கள்… தைரியம் இயல்பாகவே உங்களிடம் இருந்தது. நீங்கள் தான் எனது உத்வேகம்… எனது தைரியம்… இதுவரை நான் நினைக்காத அளவிற்கு உறுதியாக இப்போது இருக்கிறேன். பயமாற்றவனாக இருக்கிறேன். உங்களது பெருமையை முன்னெடுத்து செல்வேன். லவ் யூ அப்பா” 

என மகேஷ் பாபு அறிக்கை தெரிவித்துள்ளார் நடிகர் மகேஷ்பாபுவின் அந்த அறிக்கை இதோ…
 

pic.twitter.com/bITe3HXrub

— Mahesh Babu (@urstrulyMahesh) November 24, 2022