மகேஷ்பாபுவின் சவாலை ஏற்பாரா விஜய்...? விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | August 09, 2020 16:56 PM IST

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை அடுத்து தனது 36ஆவது படத்தில் மஹரிஷி பட இயக்குனர் வம்சியுடன் இணைகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.
இதனை தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் தனது 37ஆவது படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.Sarkaru Vaari Paata என்று இந்த படத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர்.இந்த படத்தின் ப்ரீலுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் என்றும் முக்கிய வேடத்தில் நிவேதா தாமஸ் நடிக்கிறார் என்று தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இது குறித்து படக்குழுவினர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.மகேஷ்பாபு பிறந்தநாள் அன்று இந்த படம் குறித்த ஏதேனும் ஒரு அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா காரணமாக வீட்டிலேயே இருப்பதால் பிரபலங்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.மகேஷ்பாபுவும் தனது மகள் மற்றும் மகனுடன் விளையாடும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்து வந்தார்.சமீபத்தில் மகேஷ் பாபு ட்விட்டரில் ஒரு 10 மில்லியன் ரசிகர்களை பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை படைத்திருந்தார்.
இவர் தனது மகனுடனும்,மகளுடனும் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வந்தன.இன்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும்,பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.உலகத்தின் பல இடங்களில் இருந்தும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.தற்போது மகேஷ் பாபு தனது பிறந்தநாள் அன்று க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று மரக்கன்று ஒன்றை நட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.மேலும் இதனை ஏற்குமாறு தளபதி விஜய்,ஜூனியர் NTR,ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரை நாமினேட் செய்துள்ளார்.
விஜயும்,மகேஷ் பாபுவும் நண்பர்கள் என்பது அனைவரும் தெரிந்ததே.தமிழில் விஜய் எப்படியோ அப்படி ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை தெலுங்கில் கொண்டவர் மகேஷ் பாபு.மகேஷ் பாபுவின் சில படங்களை விஜய் ரீமேக் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மகேஷ் பாபுவின் இந்த சவாலை விஜய் ஏற்பாரா என்று ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சமூகவலைத்தளங்களில் பெரிதாக ஆக்டிவ் ஆக இல்லாதவர் தளபதி விஜய்.அவ்வப்போது வந்தாலும் அவருடைய போஸ்ட்களுக்கு லைக்,ஷேர்கள் அள்ளும்.அப்படி இருக்கையில் இந்த சேலஞ்சை தளபதி விஜய் ஏற்றால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.லாக்டவுன் நேரத்தில் தளபதியின் சில புகைப்படங்கள் மட்டுமே வெளிவந்து ட்ரெண்ட் அடித்தன.இந்த சேலஞ்சை ஏற்று அவர் வீடியோ பதிவிட்டால் அந்த வீடியோ வேற லெவெலில் வைரலாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.தளபதி இந்த சேலஞ்சை ஏற்கவேண்டும் என்று ரசிகர்களுடன் இணைந்து கலாட்டாவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்
There couldn't be a better way to celebrate my birthday💚 #GreenIndiaChallenge
I pass this on to @tarak9999, @actorvijay & @shrutihaasan. Let the chain continue and transcend boundaries😊 I request all of you to support the cause. One step towards a greener world! pic.twitter.com/MGDUf9B4xu— Mahesh Babu (@urstrulyMahesh) August 9, 2020
Thalapathy Vijay's best friend dances with him after 20 years
09/08/2020 05:28 PM
Will Thalapathy Vijay accept Mahesh Babu's challenge?
09/08/2020 02:59 PM
First glimpse of Ram Gopal Varma's next controversial movie
09/08/2020 01:43 PM
Hansika's birthday surprise from team Maha
09/08/2020 01:20 PM