லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பி வருகிறது. 

Mahendran Advice After SushantSinghRajput Death Mahendran Advice After SushantSinghRajput Death

கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. விரைவில் இந்நிலையை கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி, தளபதியை பெரிய திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் முக்கிய ரோலில் நடித்த மஹேந்திரனிடம் இணையவாசி ஒருவர் ட்விட்டரில் ஒரே டிப்ரஷனா இருக்கு அண்ணா, காரணம் மாஸ்டர் படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வரவில்லை என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த மஹேந்திரன், கவலைப்பட வேண்டாம் குட்டி ஸ்டோரி பாடல் கேளுங்கள், அனைத்தும் சரியாகிவிடும் என்று பதிவு செய்துள்ளார். 

Mahendran Advice After SushantSinghRajput Death

டிப்ரஷன் எனப்படும் மனச்சோர்வில் இருந்த ரசிகரை சரியாக கையாண்டுள்ளார் நடிகர் மஹேந்திரன். டிப்ரஷன் காரணமாக நடிகர்களே தவறான முடிவை எடுக்கும் நிலையில், ரசிகரின் மேல் அக்கறை கொண்டு அவரது மனநிலைக்கு ஏற்ற வாறு பதிவு செய்த மஹேந்திரனின் செயல் பாராட்டிற்குரியது.