இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன மங்காத்தா படத்தில் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து தளபதி விஜயின் ஜில்லா, சிலம்பரசன்.TRன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், சென்னை 600028 2, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் மஹத் ராகவேந்திரா.

மேலும் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இல் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடிய மஹத் ராகவேந்திரா அடுத்ததாக பாலிவுட்டில் சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஹூமா குரைஷி இணைந்து நடிக்கும் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தொடர்ந்து காதல் கண்டிஷன்ஸ் அப்ளை மற்றும் இவன் தான் உத்தமன் ஆகிய படங்களிலும் மஹத் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் இயக்குனர் பிரபுராம் இயக்கத்தில் மஹத் ராகவேந்திரா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா. ஐஸ்வர்யா தத்தா, சாக்ஷி அகர்வால், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், டைகர் கார்டன் தங்கதுரை, மதுமிதா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா படத்திற்கு இனியன்.J.ஹாரிஸ் ஒளிப்பதிவில் B.பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்ய, தரண் குமார் மற்றும் அருள்தேவ் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்நிலையில் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா படத்தின் டீசர் தற்போது வெளியானது. அந்த டீசர் இதோ…