மகாராஷ்டிரா மாநிலம் ரசாயன ஆலை தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் துலே பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலையில், இன்று காலை வழக்கம் போல் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்துள்ளனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Fire Accident

இதனால், தொழிற்சாலைக்குள் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் செய்வதறியாது தவித்து, அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இதனையடுத்து, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.

Fire Accident

இதனிடையே, தொழிற்சாலைக்குள் கிட்டத் தட்ட 9 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், வேறு யாரும் தீ விபத்தில் சிக்கி இருக்கிறார்களா என்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.