ஆகச் சிறந்த நடிகராக படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் மகான். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள திரைப்படம் நேரடியாக அமேசானின் வீடியோவில் நாளை (பிப்ரவரி 10ஆம் தேதி) ரிலீசாகிறது.

முதல்முறையாக சீயான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபிசிம்ஹா, சனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகான் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

முன்னதாக அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பல விதமான கெட்டப்புகளில் கோப்ரா படத்திலும் மற்றும் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ள நடிகர் சீயான் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

அனைத்து சினிமா ரசிகர்களின் ஃபேவரட் நடிகராக வலம் வரும் சீயான் விக்ரமின் திரைப்பயணத்தில் 60வது திரைப்படமாக மகான் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் சீயான் விக்ரமுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மகான் படக்குழுவினர் கியூட் வீடியோ பாடலை வெளியிட்டுள்ளனர். ட்ரெண்டாகும் அந்தப் பாடல் இதோ…