எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகை ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் மஹா. இந்த படத்தில் நடிகர் சிம்பு விமானியாக நடித்துள்ளார் என்ற தகவல் தெரியவந்தது. யு.ஆர்.ஜமீல் இயக்கிய இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

maha

வாலு படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம். படத்திலிருந்து எஸ்.டி.ஆர் மற்றும் ஹன்சிகா இணைந்திருக்கும் ரொமான்டிக் போஸ்டர் வெளியாகி இணையத்தை தெறிக்க விட்டது. STR-ன் பைலட் லுக் கொண்ட போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. 

maha

இந்த படம் மார்ச் மாத இறுதியில் வெளியாகும் என்ற தகவல் சமீபத்தில் தெரியவந்தது. ஜனவரி மாத இறுதியில் துவங்கிய இதன் படப்பிடிப்பு நேற்றோடு முடிவடைந்தது. மீதம் உள்ள பேட்ச் பணிகள் மீதமுள்ள ஐந்து நாட்களில் முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. விரைவில் மஹா படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி அசத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.