எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகை ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் மஹா. இந்த படத்தில் நடிகர் சிம்பு விமானியாக நடித்துள்ளார் என்ற தகவல் தெரியவந்தது. யு.ஆர்.ஜமீல் இயக்கிய இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

maha

வாலு படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம். படத்திலிருந்து எஸ்.டி.ஆர் மற்றும் ஹன்சிகா இணைந்திருக்கும் ரொமான்டிக் போஸ்டர் வெளியாகி இணையத்தை தெறிக்க விட்டது. STR-ன் பைலட் லுக் கொண்ட போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. 

maha mathiyalagan

இந்த படம் மார்ச் மாத இறுதியில் வெளியாகும் என்ற தகவல் சமீபத்தில் தெரியவந்தது. இந்த மாத இறுதியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கும் என்று தயாரிப்பாளர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளவிருக்கிறார் எஸ்.டி.ஆர்.