தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் மகிழ்திருமேனி. இறுதியாக அருண்விஜய் வைத்து தடம் எனும் வெற்றி படத்தை படத்தை இயக்கினார். இதுதவிர்த்து விஜய்சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்திலும் நடித்து வருகிறார்.

magizhthirumeni

தற்போது ஆர்யா நடிக்கும் டெடி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி வருகிறார். திருமணத்திற்கு பிறகு ஆர்யா மற்றும் சாயீஷா ஜோடி சேர்ந்து நடிக்கும் படமாகும். இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குநர் மகிழ்திருமேனி தனது காட்சிகளை முடித்துள்ளார் என இயக்குனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

arya shakthisoundarrajan

அடுத்ததாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளார் மகிழ்திருமேனி. விரைவில் இதுகுறித்த அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.