மாடல் ஆக அறிமுகமாகி பிரபல சீரியல் நடிகையாக சின்னத்திரையை கலக்கி வருபவர் திவ்யா ஸ்ரீதர்.மாடலிங் மூலம் தனது கலை வாழ்க்கையை தொடங்கிய இவருக்கு பல பட வாய்ப்புகள் வர முதலில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

இதனை தொடர்ந்து ஹீரோயினாகவும் சில கன்னட படங்களில் நடித்து அசத்தியுள்ளார் திவ்யா ஸ்ரீதர்.கன்னடத்தில் சில சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார் திவ்யா ஸ்ரீதர்.இதனை அடுத்து தமிழில் கேளடி கண்மணி தொடரில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

இந்த தொடரில் இருந்து விலகிய இவர் இதனை அடுத்து சில கன்னட சீரியல்களில் நடித்தார்.அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி தொடரின் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனம்கவர்ந்த நாயகியாக அசத்தி வந்தார்.வெகு நாட்கள் இந்த தொடரின் ஹீரோயினாக நடித்து வந்த திவ்யா கொரோனா காரணமாக விலகினார்.இவர் நடிக்கும் புதிய தமிழ் சீரியல் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.

சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள செவ்வந்தி தொடரில் திவ்யா ஸ்ரீதர் ஹீரோயினாக நடிக்கிறார்.பிரபல நடிகர் ராகவ் இந்த தொடரின் நாயகனாக நடிக்கிறார் இந்த தொடர் வெகு விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.