சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹீரோவாக நடிக்கும் படம் மாவீரன்.இந்த படத்தினை மண்டேலா பட இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்குகிறார்.இந்த படத்தின் அறிவிப்பு ப்ரோமோ சில வாரங்களுக்கு முன் வெளியாகி செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.டீஸர் போல எடுக்கப்பட்ட இந்த அறிவிப்பு ப்ரோமோ ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

இந்த அறிவிப்பு ப்ரோமோவில் சிவகார்திகேயனின் லுக்கும் பலரையும் கவர்ந்திருந்தது.சில நாட்களுக்கு முன் மண்டேலா படத்திற்காக இரண்டு தேசிய விருதுகளை இயக்குனர் மடோன் அஷ்வின் பெற்றார்.இதுகுறித்து இவர் கலாட்டாவிற்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்தார்.இதில் பல சுவாரசிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மடோன் அஷ்வின்.

மாவீரன் படத்தின் அறிவிப்பு ப்ரோமோ செம ஹிட் அடித்து வருவது குறித்தும் எப்படி உருவானது என்பது குறித்தும் சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.படத்தின் டைட்டில் அறிவிப்பை வீடியோவாக வெளியிடவேண்டும் என முதலில் இருந்தே திட்டமிட்டிருந்தோம் , டைட்டில் லீக் ஆனதால் படம் எப்படி இருக்கும் என ஒரு சிறு டீஸர் போல ரசிகர்களுக்கு தெரிவிக்கும்படி ஒரு அறிவிப்பு ப்ரோமோவாக வெளியிட திட்டமிட்டோம்.

இதற்காக பல லுக் டெஸ்ட்களும் நடைபெற்று சிவகார்திகேயனின் லுக் செட் செய்யப்பட்டது,கடைசியாக தளபதி ரஜினி லுக் போல செய்து பார்த்தோம் சிவகார்த்திகேயனுக்கும் அந்த லுக் மிக பிடித்து போக அதையே லாக் செய்தோம்.இதற்கு ரசிகர்கள் தரும் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.