இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் பாடல் வீடியோ இதோ
By Sakthi Priyan | Galatta | November 04, 2019 16:25 PM IST
பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து நீலம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் அடுத்ததாக தயாரிக்கும் படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக ஆனந்தி, ரித்விகா ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கிறார்கள். மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்குகிறார்.
இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றது. டென்மா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். தற்போது மாவுலியோ மாவுலி பாடல் வீடியோ வெளியானது. ஸ்வேதா மோகன் மற்றும் டென்மா பாடியுள்ளனர். தனிக்கொடி பாடல் வரிகள் எழுதியுள்ளார்.