வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் மாநாடு. லாக்டவுன் பிரச்சனை முடிந்து வெகு நாட்களுக்கு பிறகு மாநாடு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. புயல், மழை பாராமல் ஷூட்டிங் பணிகளில் சிலம்பரசன் ஆர்வம் காட்டியது ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. 

மாநாடு படத்தின் அப்டேட் குறித்து காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது சுவையூட்டும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. திரையரங்குகளின் அருமையை பற்றி மிக அழகான ஒரு பதிவை செய்திருந்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அவர் கூறியிருப்பதாவது : சினிமா துளிர்க்க, மக்களை திரையரங்குக்கு இழுக்க மிகப் பெரிய சக்தி தேவை. கடற்கரை, கடைகள் நிரம்பி வழிகின்றன. திரையரங்கும் நிரம்ப வேண்டும். அதற்கு ஈர்ப்புச் சக்திகளாக இறங்க வரும் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படத்துக்கும் மிகப் பெரிய வரவேற்பு கொடுங்கள் மக்களே என்று பதிவு செய்திருந்தார். 

அவரது பதிவில் கமெண்ட் செய்த சிம்பு ரசிகர் ஒருவர், மாநாடு படம் தொடர்பாக எதாச்சும் ஒரு  அப்டேட் கொடுங்க அண்ணா பிலீஸ் என்று பதிவு செய்திருந்தார். அதற்கு பதிலளித்த சுரேஷ் காமாட்சி, வெயிட் பண்ணுங்க.. தெறிக்க விடுறோம் என்று கூறியுள்ளார். இதனால் மாநாடு படத்தின் ஆடியோ அல்லது டீஸர் பற்றிய அப்டேட்டாக இருக்குமா என்ற ஆவலில் உள்ளனர் சிம்பு ரசிகர்கள். 

மாநாடு படத்தின் முதல் பாடல் ரெடி என்று இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருந்தார். இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தற்போது சிலம்பரசன் இல்லாத காட்சிகளை படமாக்கி வருகின்றனர் படக்குழுவினர்.