மாநாடு திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !
By Sakthi Priyan | Galatta | January 14, 2021 16:10 PM IST

ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் நாளான இன்று சிலம்பரசன் நடித்து திரைக்கு வந்திருக்கும் படம் ஈஸ்வரன். இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில் ரசிகர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
அரசியல் மாநாடு நடைபெறும் கூட்டத்தில் கையில் துப்பாக்கியோடு செல்கிறார் சிலம்பரசன். அதன் பின் கட்சி கூட்டத்தில் குண்டு வெடிப்பது போன்ற காட்சி மோஷன் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. மோஷன் போஸ்டரில் இடம்பெற்ற யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை ரசிகர்களின் இதயத்தை அதிர வைக்கிறது.
லாக்டவுன் பிரச்சனை முடிந்து வெகு நாட்களுக்கு பிறகு மாநாடு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. புயல், மழை பாராமல் ஷூட்டிங் பணிகளில் சிலம்பரசன் ஆர்வம் காட்டியது ரசிகர்களை சிலிர்க்க வைத்தது.
கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
மாநாடு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு பத்து தல படப்பிடிப்பில் சிம்பு இணைவார் என்று கூறப்படுகிறது. ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கவுள்ள இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, டீஜே அருணாச்சலம், மனுஷ்ய புத்திரன், கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஒருபுறம் ஈஸ்வரன் ரிலீஸ், மறுபுறம் மாநாடு மோஷன் போஸ்டர் என தொடர்ச்சியாக கொண்டாடி வருகின்றனர் சிலம்பரசன் ரசிகர்கள்.
Silambarasan TR's Maanaadu motion poster | Venkat Prabhu | Yuvan Shankar Raja
14/01/2021 04:16 PM
Oviya shares a kissing photo - pic goes viral on social media!
14/01/2021 03:11 PM
CONFIRMED: Gabriella to walk out of Bigg Boss house - Check out the latest promo
14/01/2021 03:07 PM