பூஜையுடன் துவங்கியது மாநாடு பட ஷூட்டிங் ! ரசிகர்கள் உற்சாகம்
By Sakthi Priyan | Galatta | February 19, 2020 09:41 AM IST

இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் STR இணையும் திரைப்படம் மாநாடு. இப்படத்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. எப்போதும் தனது எதார்தமான கருத்தை மைய்யமாக வைத்து படம் இயக்கி வரும் வெங்கட் பிரபு, இப்படத்தில் அரசியல் கலந்த கமர்ஷியல் கருத்தை கதையில் வைத்து எடுக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். ப்ரோடக்ஷன் டிசைனராக ராஜீவன் இடம்பெற்றுள்ளார். சில்வா ஸ்டண்ட் மாஸ்டராக உள்ளார். வாசுகி பாஸ்கர் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகிறார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் உள்ளனர். ஆகஸ்ட் மாதம் வெளியாகும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
அப்துல் காலிக்காக STR நடிக்கிறார். நடிகர் மனோஜ் பாரதிராஜா, டேனியல் பாப், YG மகேந்திரன் மற்றும் SJ சூர்யா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.
STR's Maanaadu shooting begins in style - Pooja Pictures Released! Check out!
19/02/2020 10:24 AM
'Thala' Ajith injured in bike chase shoot for Valimai
19/02/2020 09:21 AM
Cricketer Ravichandran Ashwin gives funny Tanglish reply to Instagram follower!
18/02/2020 09:02 PM
Sivakarthikeyan's Ayalaan completes 75% shooting
18/02/2020 07:21 PM